திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம் தேதி பறிமுதல் செய்தனர். மேலும், கரையிருப்புப் பகுதியில் ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுமை வாகனத்தின் ஓட்டுநரான தாழையூத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார் (25). தாழையூத்து ராம் நகா் சுரேஷ்குமார் (23). ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சுரேஷ்குமாரின் தந்தை கலைஞரை (45). தேடிவந்த நிலையில் அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாழையூத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















