திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க செங்குன்றம் மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடி அருகே பேருந்து ஒன்றில் சோதனையிட்ட போது 2 பைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த மாதேஷ்(19). மற்றும் ராகுல் சுக்லா(20). என்பதும் ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் இருந்து இரயில் மூலம் வந்து எளாவூரில் இருந்து பேருந்தில் சென்னைக்கு சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு