மதுரை : மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (16.10.2024) கொட்டம்பட்டி குமுட்ராம்பட்டி பிரவு அருகே மேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.மாரிமுத்து தலைமையிலான தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 85 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை TN 64 AA 0127 Eicher என்ற கனரக வாகனத்தில் கடத்தி வந்த 1) கன்ணன் (42). (அகமுடையார்), த/பெ.மணி, மேல அண்ணாதோப்பு, அரசரடி, ஆரப்பாளையம், மதுரை இருப்பு கணபதிநகர், பூலாங்குளம், ஆண்டார் கொட்டாரம் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சக்திவேல் (50). (பிள்ளை) என்பவர் மூலம் ஒரிசா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 85 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட TN 64 AA 0127 Eicher ஒரு ஆன்டிராய்டு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலூர் மதுவிலக்கு காவல் நிலையத்தில் மேற்படி குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரிய வந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள். இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்