கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிதோப்பு பாலம் பகுதியில், காரில் கஞ்சா கடத்தி வந்ததாக நான்கு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அழகியப்பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த லாகிஸ்டொனல்டு (24). வடசேரி பகுதியை சேர்ந்த பாலாஜி (20). தடிகாரணங்கோணம் பகுதியை சேர்ந்த தங்கசுபின் (25). மற்றும் சீப்பால் பகுதியை சேர்ந்த அனில் (21). ஆகிய நான்கு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















