திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ம் ஆண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (48). சுரேஷ் (41). சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜ் (24).அஜித்குமார் (26). ஆகிய நான்கு நபர்களை நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் .பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்.சிபின், இ.கா.ப, நீதிமன்ற தலைமை காவலர்.தமிழ்ச்செல்வி மற்றும் அரசு வழக்கறிஞர்.விஜய பாண்டியனின் சீரிய முயற்சியால் மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் நான்கு நபர்களுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா