தர்மபுரி : தர்மபுரி மாவட்ட தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேளரஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் (67)என தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த 450 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.