திருநெல்வேலி : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரியார் நகர் அருகே காவல் உதவி ஆய்வாளர், அல்லிஅரசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் வேல்முருகன்(25). என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் விற்பனைக்காக சுமார் 3.9 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வேல்முருகனை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா, இருசக்கர வாகனம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















