திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முகமது அலி மகன் சாகுல் ஹமீது(23). என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விற்பனைக்காக சுமார் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சாகுல் ஹமீதை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















