திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மானூர் அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மானூர், வடக்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து (35). என்பவரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 505 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் சுடலைமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 505 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்