திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, டானா விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வி.கே.புரம், தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து(47). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் மாரிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்