தென்காசி : தென்காசி மாவட்டம், ஆய்க்குடி மற்றும் SVகரை காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த SVகரையை சேர்ந்த ராஜ்குமார்(28), என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின், கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 26.04.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி, அவர்கள் சமர்பித்தார்.