சிவகங்கை : ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும்
நாள் கூட்டம் வருகின்ற (18.10.2022), செவ்வாய்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (18.10.2022), செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆகவே, ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப்பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி