திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து, பணிமூப்பு அடைந்து ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர் திரு. தனசிங் சாலமோன் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, பணி நிறைவு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், திரு. தனசிங் சாலமோன் அவர்கள் பல வருடங்களாகச் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பில் செய்த சிறப்பான சேவை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பை முன்னிறுத்தி பாராட்டினர்.
காவல் கண்காணிப்பாளர் அவர்களது பணி சாதனைகள் மற்றும் அஞ்சாமை உணர்வுக்கு நன்றியையும், எதிர்கால வாழ்க்கைக்கு இனிய வாழ்த்துகளையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















