திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா(மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகரில் (19-12-2024) அன்று, ம.தி.தா பள்ளியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு சமூக வலைதளங்களில் உள்ள ஷாப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவது, ATM கார்டு மற்றும் OTP, சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி, மற்றும் அனைத்து இணையவழி குற்றங்கள் குறித்தும், மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் இலவச எண்:1930 பயன்படுத்துவது பற்றியும், சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் பற்றியும் விழிப்புணர்வு வாசகங்களை வழங்கினர். திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர், சண்முகவடிவு தலைமையியில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்