திண்டுக்கல் : திண்டுக்கல் பிச்சாண்டி ஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் நலச்சங்கம் சார்பாக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது அது சமயம் தீர்மானமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கோரியும் காவல்துறையில் வழங்கும் ரேஷன் பொருட்களை வழங்க கோரியும் பழைய பென்ஷன் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் காவல்துறையில் 10% இட ஒதுக்கீடு கூறியும் தற்போது வழங்கிவரும் மருத்துவப்படி 300 இருந்து 1000 ரூபாயாக உயர்த்தக் கோரியும் ஆண்டிற்கு ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை செய்வதற்கு ஆணை கோரப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைவர் திரு.சியாகுலமீதும் செயலாளர் திரு.பாலசுப்ரமணியம் பொருளாளர் திரு.வீராசாமி கௌரவத் தலைவர் திரு.சுகுமாரன் செயற்குழு திரு.ரத்தின பாண்டியன் திரு.அங்குசாமி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.