தருமபுரி : தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த கூத்தப்பாடி மடம் பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் விஸ்வநாதன் (37), மும்பையில் சிப்ஸ் கடை வைத்திருந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி காலை பென்னாகரம் சென்ற விஸ்வநாதன் காணாமல் போனார் இந்நிலையில் அவரது செல்போனில் இருந்து அவரது தம்பி பூபதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர்கள் விஸ்வநாதனை கடத்தி வைத்திருப்பதாகவும் 80 லட்சம் கொடுத்தால் தான் விடுவோம் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா ஒகேனக்கல் போலீசில் கடந்த வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன், அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி விஸ்வநாதனை கடத்திய கும்பல் சேலம் மாவட்டம் ஓமலூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கடத்தல் கும்பலிடம் இருந்து விஸ்வநாதனை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட ரத்தினம் (46), பாஸ்கர் (22), தமிழரசன் (27), காந்தி (42), முருகன் (48), கார்த்திகேயன் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.