மதுரை : மதுரையைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து விட்டு திரும்புகையில் கோரிப்பாளையம் அருகே போக்குவரத்து காவலர்கள் ரூபாய் 500 அபராதம் விதித்ததாக வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா IPS அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, ஆட்டோ ஓட்டுநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய காவல் ஆணையர் அவர்கள் ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்படட அபராதத் தொகையை ரத்து செய்தார்.




















