திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா,(தலைமையிடம்) S.விஜயகுமார்,(கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில்,(10-12-2024) ம் தேதியன்று, போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆணையர், கணேசன் தலைமையில் இலகுரக சுமை வாகன ஓட்டுநர்களுக்கும், வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணி புரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பணியிடை பயிற்சி மையத்தில், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், சந்திப்பு மணிமாறன், பாளையங்கோட்டை செல்லத்துரை மற்றும் காவல் துறையினர் இணைந்து பயணிகள் பேருந்துகளில் படிகளில் பயணம் செய்வதை கட்டுப்படுத்தவும், சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்தும், சரியான வேகத்தில் பேருந்துகளை இயக்குவது குறித்தும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்