கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு . ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக (28.09.2025) கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் திரு.அருள்சேகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஜெயபிரகாஷ் தலைமையிலான இராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி ,அஞ்சு கிராமம் கன்னியாகுமரி பகுதியில் வாகன தணிக்கையின் போது (18). வயது குறைவாக வாகனம்ஓட்டி வந்த 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் (18). வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.