தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன்(27), லாரி டிரைவராக இருந்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த 2016-ல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருள் செல்வனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நேற்று நீதிபதி திரு.சையத் பரகத்துல்லா அவர்கள் அருள்செல்வனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்