சென்னை : சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், இ.பி. காலனி பகுதியை சேர்ந்த பாஷா (54), இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக, பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மின்சார ரெயில் புறப்பட்டதால், பதற்றமடைந்த அவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்காக பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே காவல் துறையினர், திரு. அனுஷா, திரு. சுமேஷ் ஆகியோர் இதை பார்த்ததும் உடனே சுதாரித்துக்கொண்டு, பாஷாவை நடைமேடை பக்கமாக, தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளனர்.


















