திண்டுக்கல் : திண்டுக்கல் கோபால்பட்டி அருகே ஓடும் பஸ்ஸில் தமயந்தி என்பவர் சொத்து தகராறு காரணமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி உதயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கணவாய் பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் முன்னிலையில் குற்றவாளி ராஜாங்கம்(60) சரண் அடைந்தார்.இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.