தர்மபுரி : தர்மபுரியில் டவுன் பேருந்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் நகை பறித்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபரை காவல் துறையினர், கைது செய்தனர். தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை அருகே தம்மனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மனைவி சத்தியவாணி (33), இவர் நேற்று காலை கணவருடன் தர்மபுரிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக கடைவீதியில் இருந்து டவுன் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது அவரது கழுத்தில், இருந்த செயின் அறுந்ததால் பேருந்தில், அதை பர்சில் வைத்துக்கொண்டு தம்மனம்பட்டி செல்லும் டவுன் பேருந்தில், ஏறினார். பேருந்தில், கூட்ட நெரிசல் இருந்தது.
அப்போது பேருந்தில், இருந்த வாலிபர், சத்தியவாணி பையில், வைத்திருந்த பர்சை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே, பயணிகள் இறங்கி சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மபுரி டவுன் காவல் துறையில், ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சுடுகுருமன்பெட் பகுதியில், சேர்ந்த வினய்குமார் மகன் இமானுவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து பர்ஸ்சை மீட்ட காவல் துறையினர் , அதை சத்தியவாணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.