கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணாதுரை என்பவர் டைலர் கடை வைத்து நடத்தி வந்ததாகவும், அவர் (12.02.2026) ஆம் தேதி இரவு சுமார் 09.00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்று, மறுநாள் (13.02.2026) ஆம் தேதி காலை சுமார் 09.00 மணிக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டு உடைந்திருந்ததாகவும் , தான் வைத்திருந்த பணம் ரூபாய் ₹80,000/-காணவில்லை எனவும் ஓசூர் நகர காவல் நிலையம் சென்று புகார் கொடுத்ததில் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















