குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி திரு.பத்ரி நாராயணன் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற வாகன சோதனையில் தலைகவசம், உரிய ஆவனங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரத்து 855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாரமாக நடைபெற்று வரும் வாகன சோதனையில் ஹெல்மெட், உரிய ஆவனங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 19 ஆயிரத்து 505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.