திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையிலும், தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தாழையூத்து உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்கள், தலைமையில் நாங்குநேரி உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ் குமார் அவர்கள் தலைமையில் வள்ளியூர் உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு (IUCAW) துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் (பொறுப்பு) அவர்கள் தலைமையில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சேரன்மகாதேவி உட்கோட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நிலுவையில் இருந்த மொத்தம் 86 மனுக்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.