திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூர், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பேராச்சி செல்வி (38). சண்முகசுந்தரம் (33).மாரிமுத்து (30). கிங்ஸ்லின் கோயில் ராஜ் (32) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கருதப்பட்ட இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் வி. பிரசன்ன குமார், இ.கா.ப. அவர்கள் பரிந்துரைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அவர்கள் உத்தரவின்படி பேராச்சி செல்வி மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், மற்ற மூவர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் (28.02.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
அதேபோல், திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய மேலப்பாளையத்தைச் சேர்ந்த சிவமுருகன் என்ற முருகன் (36). புரோஸ்கான் யாசர் (29). சிந்தா மாதர் (22). தச்சநல்லூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (29). ராகேஷ் (23). மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய கொக்கிரகுளம் மாடசாமி (42). பழையபேட்டை கிருஷ்ணபேரியைச் சேர்ந்த பெரியராஜா (29). ஆகியோரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையர்கள் திரு. வினோத் சாந்தாராம் (கிழக்கு), திரு. விஜயகுமார் (மேற்கு) ஆகியோர் பரிந்துரைத்தனர். அதன் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி 7 பேரும் (28.02.2026) அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பொது அமைதியை பாதிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















