திருச்சி: திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று கடந்த 14ம்தேதி) வீடு திரும்பினார். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவுதற்காக தனது மே மாத ஊதியமான ரூ. 37 ஆயிரத்து 800 ஐ பிடித்தம் செய்து முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிதிக்கு அனுப்பிவைக்கவேண்டும் என தெரிவித்து அதற்கான கடிதத்தை பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபனிடம் வழங்கியுள்ளார். இவரது செயலை காவல்துறையினர் பாராட்டினார்