நெல்லை: பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி தலைமையிலான போலீசார் வி.எம்.சத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சக்திமுகேஷ் 27,சுந்தர்ராஜ் 24 ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து,அவர்களிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.