கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா, அன்று (13.03.2026) மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. சரவண சுந்தர் IPS, அவர்கள் , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார் IAS , அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை M.A அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , காவல் உதவி ஆய்வாளர்கள் , தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
















