நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை அருகே ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடிவேல் 32. என்பவர் பூசாரியாக உள்ளார். காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் உள்ள 40 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை 15 கிலோ எடை உள்ள வெண்கல மணிகள் உள்பட பூஜை பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி புகார் அளித்தார். அதன்பேரில் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திரு.சந்திரமவுலி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமதி.மகாலட்சுமி எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் திரு.குலசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் நாமக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் கைரேகை சேகரிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.