திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்(27). என்ற ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கொலை வழக்கில் தொடர்புடைய கே.டி.சி நகரைச் சேர்ந்த சுர்ஜித்(23) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக சுர்ஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவிட்டார். இதையடுத்து, சுர்ஜித் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் (30.07.2025) அன்று சிறையிலடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்