தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என சிந்தலக்கரை பகுதி பொதுமக்கள் 250 பேருக்கு அரிசிப் பை மற்றும் காய்கறி
தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று வழங்கினார். திங்கள் கிழமை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.
பொதுமக்கள் இந்த ஊரடங்கு நாட்களில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அப்போதுதான் கொரோன வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், அதிலும் இரண்டு முகக்கவசம் அணிந்தால் மிகவும் நல்லது. அதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை சிந்தலக்கரை காந்திபவன் ஹோட்டல் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போதுதூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.