திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ரஸ்தா அருகே சிற்றாற்று கரை ஓரம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது, சந்தேகத்தின் பேரில் ரெட்டியார்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரதிஷ் (34). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 7 கிலோ கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேற்படி உதவி ஆய்வாளர், ரதிஷை மானூர் காவல் நிலையம் அழைத்து வந்தார். இது குறித்து மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ரதிஷை (29.08.2024) அன்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்