திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் கும்பகோணம் திருவிலாங்குடியைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 35 என்பவர் ஒத்திக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்து வருகிறார். அதே கும்பகோணத்தைச் சேர்ந்த சேர்ந்த (காயம்பட்ட நபர்) கார்த்தி வயது 24 என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்து விவசாய நிலத்தின் காவல்காரராக வேலைக்கு அமர்த்தப்பட்டு காவல் காத்து வந்துள்ளார்.
இந்நிலையில் 28/10/22 ம் தேதி இரவு 10.30 மணியளவில் மோகன்ராஜ் தனது வீட்டு வாசல் முன்பு அமர்ந்தவாறு ஏர் ரைஃபிலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கவனக்குறைவாக லோடு செய்யப்பட்டு ட்ரிகரில் கைபட்டதனால் ஏர் ரைபிள் வெடித்து அருகே நின்றிருந்த கார்த்திக் என்பவருக்கு மார்பில் பட்டு காயம் ஏற்பட்டது. மேற்படி ஏர் ரைபில் பயன்படுத்துவதற்கு லைசென்ஸ் தேவையில்லை. இருந்தபோதிலும் கவனக்குறைவாக பயன்படுத்தி அதனால் ஒரு நபருக்கு காயத்தை ஏற்படுத்தியமைக்காக கும்பகோணத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மோகன்ராஜ் வயது 35 என்பவரையும் மானுரைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 34 என்பவரையும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.