திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஐந்தாவதாக ஒரே ஒரு மகன் கிரண் (23). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மே 1ஆம் தேதி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில் மதியம் 1 மணி அளவில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது சரிவர நீச்சல் தெரியாத நிலையில் ஏரியின் ஆழத்தில் சென்றவர் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கரையின் மேற்புறத்தில் நின்று கவனித்திருந்த நண்பர்கள் கூச்சலிட்டு இத்தகவலை மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். விரைந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு வீரர்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணி வரையும் தேடி பார்த்தும்
கிரனின் உடல் கிடைக்காததால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை தள்ளி வைத்தனர். இதனை கரைமேல் நின்று பார்த்து கதறி அழுத பெற்றோர்கள் வேதனையுடன் வீடு திரும்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு