கிருஷ்ணகிரி: ஓசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்