அரியலூர்: பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்துக்கொண்டு தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய முதியவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார். சந்தேகத்திற்கிடமாக பல ஏ.டி.எம் கார்டுகளை வைத்திருந்த நபரை கவனித்த முதியவர் உடனடியாக அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் தொடர் மோசடியில் ஈடுபட்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குற்றவாளியை பிடிக்க துணிச்சலுடன் செயல்பட்ட முதியவரின் விழிப்புணர்வையும் சமூகப் பொறுப்பையும் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
















