திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து நூதன முறையில் ஏ.டி.எம் ஐ பெற்று பணம் திருடிய நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி தனஜெயம் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் குற்றவாளியை புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கைது செய்தனர். உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்களுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

செந்தாமரைக் கண்ணன்