கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோபால் என்பவர் தேன்கனிக்கோட்டையில் குடியிருந்து வருவதாகவும் (13.02.2025) ஆம் தேதி மதியம் சுமார் 3.00 மணிக்கு தேன்கனிக்கோட்டை To ஓசூர் ரோட்டில் உள்ள SBI ATM – மில் பணம் எடுக்க சென்று நின்றுக் கொண்டிருந்த போது குற்றவாளி தன்னிடம் வந்து ATM கார்டில் பணம் எடுத்து தருவதாக ATM கார்டை வாங்கிக் கொண்டு ATM உள்ளே சென்று பணம் இல்லை எனக் கூறி வேறு ATM கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாகவும் பின்னர் தன்னுடைய அக்கவுண்டில் ₹18,300/- ரூபாய் பணம் திருடு போய்விட்டதாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் ஆஜராகிய கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து ATM கார்டில் பணம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து ₹18,300/- திருடிய பணத்தை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்