தூத்துக்குடி: கடந்த 14.04.2021 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் எதிரிகள் கைது செய்யப்பட்டு, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்கள் பெற்றும் இவ்வழக்கில் 24 சாட்சிகளை விசாரணை செய்து வாக்குமூலம் பெறப்பட்டு 19 நாட்களுக்குள் மாதிரி குற்ற இறுதி அறிக்கை தயார் செய்தும் அதே போன்று கடந்த 22.04.2021 அன்று புதூர் காவல் நிலைய எல்லைக்குட்ப்ட்ட SC/ ST Act வழக்கின் அனைத்து ஆவணங்களையும் பெற்றும் வழக்கின் 32 சாட்சிகளை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு 11 நாட்களுக்குள் மாதிரி குற்ற இறுதி அறிக்கை தயார் செய்த விளாத்திகுள உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் . பிரகாஷ் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடந்த 2 கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 5 பேரை விரைந்து கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் . வேல்முருகன், உதவி ஆய்வாளர் . சங்கர், தலைமைக் காவலர் . கண்ணன், முதல் நிலை காவலர் . செந்தில் ராஜா, காவலர்கள் . முனாவர் செரிப் மற்றும் . சுஜேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 08.05.2021 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட இலந்தைகுளம் சந்திப்பு மற்றும் பன்னீர்குளம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 240 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 600/- பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்த கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் . மணிவண்ணன், உதவி ஆய்வாளர் . அரிகண்ணன், முதல் நிலை காவலர் . மோகன்ராஜ், காவலர் . கணேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 04.05.2021 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரி முத்துபாண்டி என்பவரை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்தங்கராஜ், உதவி ஆய்வாளர்கள் மாதவராஜா, முருகன், தலைமை காவலர் அரிகிருஷ்ணன், காவலர்கள் அருண் விக்னேஷ், பாண்டீஸ்வரன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 04.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 2,89,500/- மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த எதிரியை கைது செய்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜன், முதல் நிலை காவலர் செந்தில்குமார், காவலர் முகம்மது மைதீன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கடந்த 23.04.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாள் தெரு பகுதியில் அபிராமி மஹாலில் இனம் தெரியாத ஆண் நபர் மயங்கி கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் 29.04.2021 அன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் 6 நாட்கள் கழித்து இறந்த நபரின் பெயர் விலாசம் கண்டுபிடித்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், முதல் நிலை காவலர் மணிமாறன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 02.05.2021 அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு வழங்கப்பட்டதின் அடிப்படையில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுவிற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்த 208 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து எதிரிகள் இருவரை கைது செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 05.05.2021 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் சோதனைசாவடியில் சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல் நிலைய போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியையும், எதிரியையும் பிடித்து மதுரை மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்த முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர். சின்னதுரை, முதல் நிலை பெண் காவலர் பூர்ணசெல்வி மற்றும் காவலர் ரவிக்குமார் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கின் நிலுவையில் இருந்த பிடியாணை எதிரியான போக்கிரி கண்ணன் என்பவரை திருச்சி சென்று கைது செய்த கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர் பால்தினகரன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியின்போது சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உடனிருந்தார்.