திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.வந்திதா பாண்டே. இ.கா.ப. மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப். இ.கா.ப. முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தனித்திறமைப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா