தேனி: கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சரகத்திற்கு உட்பட்ட சிக்னல், கம்பம்மெட்டு, பழைய பஸ்ஸ்டாண்ட், வடக்கு பட்டி, உள்ளிட்ட முக்கியமான இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. கம்பம் மெயின்ரோடு, வேலப்பர்கோயில்தெரு, பகுதிகளில் காவல்துறை சார்பில் பேரிகாட் அமைக்கப்பட்டிருந்தது. இதை தேனி எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு செய்தார்.
கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, மற்றும் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வெளியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.