குமரி: குமரிமாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள 71 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் இன்று வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே புத்தன் சந்தையில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர். திரு.செலின் குமார் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக் மற்றும் கார் எரிப்பு சம்பவத்தில் துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகள் இரு தினங்களுக்குள் பிடிபடுவார்கள் .
கடந்த 6 மாதங்களில் 260 பேருடைய செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ரவுடிகள் பட்டியலில் உள்ள 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 190 வழக்குகளில் 197 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக 3746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 3682 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது,மாவட்ட எல்கைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் மாவட்ட முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மிக விரைவில் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.