தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் (13.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் அவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், இதர துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர்திகாரிகள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
















