தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள உதவிக் குழு தலைவர், குழு தலைவர், உதவி படைப்பிரிவு தளபதி, படைப்பிரிவு தளபதி ஆகிய 43 பணியிடங்களுக்கு (24.12.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் தேர்வு நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் தகுதியான 67 பேர் பதவி உயர்வுக்கான கவாத்து பயிற்சி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.