திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் நகர் பகுதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து நடைமுறைகள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம்,நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிபின், ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன், திண்டுக்கல் நகர் போக்குவரத்து ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா