தூத்துக்குடி: (19.10.2024) கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலம் அருகில் உள்ள மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினருக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் உட்கோட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோவில்பட்டியில் உள்ள திருமண மஹாலில் வைத்து காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.