திருச்சி: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி “அரசியலமைப்பு தினம்” கொண்டாடப்படுகிறது. எனவே, ( 26.11.2025)-ந் தேதி திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் தலைமையில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
















