திண்டுக்கல் : திண்டுக்கல் சக்தி தியேட்டர் அருகே கஞ்சா கடத்தி வந்த ஜி.டி.என் கல்லூரி அருகே உள்ள கதிர்வேல் (வயது 34). குமரன் திருநகரை சேர்ந்த சிவகுமார் (33). என் .ஜி. ஓ காலனியை சேர்ந்த மணி (44) ஆகிய மூன்று பேரை எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா,ஒரு ஆட்டோ, 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா